Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2016

சருமத்தை மாசுபடாமல் பாதுகாக்க..


1. எப்போது வெளியே சென்று திரும்பினாலும் கண்டிப்பாக சோப் போட்டு முகம், கை, கால்களை நன்றாகக் கழுவ வேண்டும்.

2. இரவில் படுக்கப்போகும் முன் தரமான 'மாய்ஸ்டு ரைஸிஸ் க்ரீம்' 'கோல்ட் க்ரீம்' ஆகியவற்றை முகத்தில் தடவ வேண்டும்.

3. காலையில் வெளியே செல்லும் முன் சூரிய வெப்ப தாக்காதிருக்க சன்டேன் லோஷன் தடவிக் கொள்ள வேண்டும்.

4. வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

புருவங்களைச் சீர்படுத்தி மினி ஃபேஷியல் செய்து முடியை சீராக வெட்டி வைத்து கொள்ள அதிகம் செலவாகாது. மாதமொரு முறை இவற்றைச்  செய்து கொள்வது முகத்தின் அழகைப் பாதுகாக்க உதவும். முகத்திற்கு ஃபேஷியல் தானாகவே செய்து கொள்ளும்போது கவனக் குறைவாக சரியாகச்  செய்யாவிட்டால் தோலில் பிரச்சினைகள் உண்டாகும். அலர்ஜி, எரிச்சல் ஏற்படலாம்.

சரியான 'க்ரீ' மை அளவாக போட்டு சரியாக ஆவி பிடிக்க வைத்து கறுப்புப் புள்ளிகளை (பிளாக் ஹெட்ஸ்) நீக்க வேண்டும். அறுபது வயதிற்கு  மேற்பட்டவர்கள் தவறியும்கூட தானே செய்து கொள்ளக்கூடாது. பெண்கள் அவரவர்கள் முக அமைப்புக்கு ஏற்றவாறு கொண்டை போட்டுக் கொண்டால்  அழகாக இருக்கும். பெரிய முகம் உள்ளவர்களும், சிறிய நெற்றியுடையவர்களும் வகிடு எடுக்காது தூக்கி வாரி சிறிய கொண்டையாகப் போட்டுக்  கொண்டால் நன்றாக இருக்கும்.

சிறிய வட்ட முகம் உள்ளவர்கள் கொஞ்சம் உயர்த்திப் பெரிய கொண்டையாகப் போட்டுக் கொண்டால் மிக எடுப்பாக இருக்கும். அகன்ற பெரிய  நெற்றியுடையவர்கள் வகிடு எடுத்து தழைய வாரி இரு காது மடல்களின் அருகிலும் சிறிதளவு முடியை எடுத்துச் சுருட்டி விட்டுக் கொண்டால்  அழகாக இருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.