தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்ற, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு, முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்ததுடன், தமிழகத்தின் வளர்ச்சிக்காக, தி.மு.க., உடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாக தெரிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வராக, 6வது முறையாக நேற்று முன்தினம் ஜெயலலிதா பொறுப்பேற்றுள்ளார்.
அவரது அமைச்சரவை பதவியேற்பு விழாவில், அரசியல் வேறுபாடுகளை மறந்து, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தி.மு.க., - எம்.எல்.ஏ., க்களுடன் பங்கேற்றார். ஆனால், ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட வில்லை.அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு பின்புறம், 12வது வரிசையில் இடம் ஒதுக்கப் பட்டது. அரசியல் அரங்கில், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க., அரசு திட்டமிட்டு, ஸ்டாலினை அவமரியாதை செய்ததாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டினார். சமூக வலைதளங்களிலும், அ.தி.மு.க.,வை விமர்சித்து,கருத்துக்கள் பகிரப்பட்டன.இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:
புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில், எம்.எல்.ஏ., ஸ்டாலின் பங்கேற்றதை அறிந்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதற்காக, அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எம்.எல்.ஏ.,க்களுக் காக ஒதுக்கப்பட்ட இருக்கையில், ஸ்டாலின் அமர வைக்கப்பட்டது, எனக்கு தெரிய வந்தது. விழாவுக்கு வருவோருக்கு, அரசு நெறிமுறைகளின்படி, பொதுத் துறை சார்பில் இருக்கைகள் ஒதுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். இருக்கை ஒதுக்கப்பட்டது,
ஸ்டாலினுக்குவருத்தத்தை ஏற்படுத்தி இருக்குமானால், ஸ்டாலினையோ, அவரது கட்சியையோ, அவமரியாதை செய்யும் நோக்கம், அரசுக்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.விழாவில், ஸ்டாலின் பங்கேற்பதை, அதிகாரிகள் என் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தால், அரசு நெறிமுறைகளை தளர்த்தி, அவருக்கு முன் வரிசையில் இருக்கை வழங் கும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பேன்.
ஸ்டாலினுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக, தி.மு.க., உடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறேன், என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முதன் முறையாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததோடு, தி.மு.க., உடன் இணைந்து செய லாற்ற விரும்புவதாக, ஜெயலலிதா கூறியிருப்பது, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அவரின் இந்த திடீர் அணுகுமுறையை பலரும் வரவேற்றுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.