Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 12, 2016

மிஸ்டர் தன்னம்பிக்கை ஐ.ஏ.எஸ்.! நம்பிக்கையூட்டும் மாற்றுத் திறனாளியின் கதை


'என்னைப் போன்றவர்கள் இனிமேல் இதுபோன்ற உயர் பதவிக்கு வரலாம் என்ற முன்மாதிரியாக, முன்னோடியாக உள்ளேன்' என்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற சென்னையை சேர்ந்த பார்வையற்ற பட்டதாரி வாலிபர்  பாலநாகேந்திரன் கூறினார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த பார்வையற்ற பட்டதாரி வாலிபர் பாலநாகேந்திரன் என்ற வாலிபரும் வெற்றி பெற்றுள்ளார். இவரது தந்தை தேவதாஸ் முன்னாள் ராணுவவீரர். தாய் சுந்தரி.

வெற்றி குறித்து பாலநாகேந்திரா கூறுகையில், " நான் சென்னை ஓட்டேரியை சேர்ந்தவன். லயோலா கல்லூரியில் பி.காம். படித்தேன். எப்படியாவது ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. வசதி படைத்தவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறமுடியும் என்ற நிலையை மனிதநேய மையம் மாற்றி ஏழை மற்றும் நடுத்தர மக்களும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத பயிற்சி கொடுத்து வருகிறது. அந்த பயிற்சி மையத்தில் 2010-ம் ஆண்டு முதல் படித்து வருகிறேன்.

எனக்கு ஐ.ஏ.எஸ். பணி கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னைப் போன்றவர்கள் இனிமேல் இதுபோன்ற உயர் பதவிக்கு வரலாம் என்ற முன்மாதிரியாக, முன்னோடியாக உள்ளேன். என்னைப்போன்ற பார்வையற்ற பட்டதாரிகளுக்கு என்னால் முயன்ற உதவியை செய்வேன். 2 முறை முதல்நிலை தேர்வையும், 2 முறை மெயின் தேர்வையும் எழுதியுள்ளேன். ஒரு முறைதான் நேர்முகத்தேர்வை சந்தித்தேன். முதல் தேர்விலேயே வெற்றி பெற்றுள்ளேன்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.