Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 17, 2016

கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி


தேவையான பொருட்கள் :

சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1 1/2 கப்
எண்ணெய் - தேவைக்கு
அரிசி - 1 1/2 கப்

அரைக்க :

கொத்தமல்லி தழை - 1 கட்டு
பூண்டு - 5 பல்
உப்பு - ருசிக்கேற்ப
பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப

செய்முறை :

* அரிசியை முதலில் வேகவைத்து உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.

* வெங்காயம் வதங்கியம் அரைத்த மசாலாவை வாணலியில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* எண்ணெய் ஓரங்களில் வர ஆரம்பித்தவுடன் சாதத்தை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.

* சுவையான கொத்தமல்லி சாதம் ரெடி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.