திருப்பூரில், 570 கோடி ரூபாயுடன் பிடிபட்ட மூன்று கன்டெய்னர் லாரிகளில், ஒன்றின் பதிவு எண் போலி என்றும், அது, 'இன்னோவா காருக்குரியது' என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உரிமையாளரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே மர்ம முடிச்சுகள் அவிழும் என்கின்றனர், அதிகாரிகள்.கோவையில் இருந்து ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்துக்கு, 570 கோடி ரூபாயை எடுத்துச் சென்ற மூன்று, 'கன்டெய்னர்' லாரிகளை, திருப்பூர் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள், கடந்த 14ம் தேதி பறிமுதல் செய்தனர்.
நேற்று இந்த லாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் கோவை கொண்டுவரப்பட்டு, ஸ்டேட் பாங்க் கருவூல மையத்தில், பணம் 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது.எனினும், பணத்தை ஏற்றிச் செல்ல வந்த ஆந்திரா மாநில பதிவெண் கொண்ட மூன்று கன்டெய்னர் லாரிகளும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. காரணம், அவற்றின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
பிடிபட்ட மூன்று லாரிகளில் ஒன்றின் பதிவெண், AP 13 X 5204 என, நம்பர் பிளேட்டில் உள்ளது. ஆனால், இந்த நம்பர், உண்மையில் இந்த கன்டெய்னர் லாரிக்குச் சொந்தமானதல்ல என்றும், ஆந்திரா மாநிலம், ைஹதராபாத்தைச் சேர்ந்த ஜாபர் அகமதுகான் என்பவருக்குச் சொந்தமான, 'இன்னோவா' காருக்குச் சொந்தமானது என்றும், அந்தக் கார் தற்போது உபயோகத்தில் இல்லை என்றும், அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
இதுகுறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சந்தேகத்துக்குரிய லாரியின் பதிவெண், ஒரிஜனல் அல்ல; அது, ஹைதராபாத் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில், 'இன்னோவா கார்' என, பல ஆண்டுக்கு முன் பதிவு செய்யப்பட்டது என, எங்களுக்கும் தகவல் வந்துள்ளது. அந்த கார் தற்போது தனியார் நிதி நிறுவனத்தின் பிடியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், AP 13 X 8650 என்ற லாரியின் உரிமையாளர் பெயர் காஜா முகமது என்றும், AP 13 X 5203 என்ற லாரியின் உரிமையாளர் சலீம் முகமது என்றும் ஆவணத்தில் உள்ளது; எனினும், இவற்றின் நம்பகத்தன்மை குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது.
பல கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் செல்ல, போலி பதிவெண் கொண்ட லாரியை, வங்கி அதிகாரிகள் தெரிந்தே ஒப்பந்தம் செய்தார்களா? அவற்றின் ஆர்.சி., புத்தகம், இன்சூரன்ஸ் ஆவணங்களை பரிசோதிக்கவில்லையா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த வாகனத்தை ஒப்பந்தம் செய்த வங்கி அதிகாரிகள், லாரி உரிமையாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு, அந்த போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.