வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும், இதன் காரணமாக சென்னையில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வெதர்மேன் நிறுவனம் எச்சரித்துள்ளது.கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், சென்னைக்கு 90 கி.மீ., தொலைவில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழ்நாடு வெதர்மேன், ஸ்கைமெட் வெதர் போன்ற தனியார் வானிலை கணிப்பு நிறுவனங்கள், அடுத்த 48 மணி நேரத்தில் மழை தொடரும். இதனால் சென்னையில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளன. தற்போது உறுவாகி உள்ள புயல் வடக்கு மற்றும் வடகிழக்காக நகரக்கூடும் என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இந்நிறுவனங்களின் கணிப்பு சரியாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மழை பாதிப்பை சமாளிக்க ஏற்கனவே 200 பேர் கொண்ட பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் 405 வீரர்கள் அடங்கிய 9 பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் 25 ரப்பர் படகுகள் சென்னை விரைந்துள்ளன. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக அரசும் எச்சரித்துள்ளது.
இன்று காலை 6.30 மணி வரையிலான சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் மழையளவை பொருத்தவரை, செம்பரம்பாக்கம் பகுதியில் 102 மிமீ மழை பதிவாகி உள்ளது. சென்னை நகரில் 103 மிமீ.,ம், புழல் பகுதியில் 81 மிமீ.,ம், திருவள்ளூரில் 66 மிமீ.,ம், ஆவடியில் 74 மிமீ.,ம், செய்யாறு பகுதியில் 37 மிமீ.,ம் மழை பதிவாகி உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.