Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 23, 2016

சிங்கங்களின் கூண்டுக்குள் குதித்து இளைஞர் தற்கொலை முயற்சி


சிங்கங்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்றதையடுத்து, சிலி நாட்டின் சாண்டியாகோ பூங்காவில் இரண்டு சிங்கங்கள் சுட்டுக்கொல்லப்பட்டன. சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். ஃபிரன்கோ லூயிஸ் ஃபெரர்டா ரோமன் என்ற இளம் சுற்றுலாப் பயணி, திடீரென சிங்கத்தின் கூண்டுக்குள் குதித்தார். தான் சிங்கங்களுக்கு இரையாகப் போவதாகவும் அவர் அறிவித்தார். இதையடுத்து, அந்த கூண்டுக்குள் இருந்த மூன்று சிங்கங்கள் இந்த இளைஞரைக் கடித்துக்குதறத் தொடங்கின. இதைப் பார்த்து மற்ற சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக அங்கு வந்த பூங்கா பணியாளர் இரண்டு சிங்கங்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்பு கூண்டிலிருந்து மீட்கப்பட்ட அந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.