கணவனின் தம்பிக்கு திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றதால் கவலையடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் வேலுார் மாவட்டம், திருப்பத்தூரையடுத்துள்ள மட்றப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விஜயன் என்பவருக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன், பவித்ரா ( 22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
விஜயன், கர்நாடக மாநிலம், பெங்களூரில் பணியாற்றி வருகிறார். மாதத்துக்கு ஒருமுறை மட்டும் ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதற்கிடையே பவித்ரா, விஜயனின் தம்பி கார்த்திக் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கார்த்திக்கிற்கு திருமணம் செய்வதற்காக, பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்ததுள்ளனர்.
இதற்கு, பவித்ரா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அடிக்கடி அவர்கள் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் பவித்ராவின் செயலை கண்டித்து தீவிரமாக கார்த்திக்கிற்கு பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த பவித்ரா, வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதையடுத்து, அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டி பவித்ராவை பார்க்கச் சென்ற கார்த்திக்கை உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த கார்த்திக், தர்மபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பவித்ராவின் தந்தை பாலகிருஷ்ணனின் முறைப்பாட்டையடுத்து, திருப்பத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து பவித்ராவின் மாமனார், மாமியார் மற்றும் கணவன் விஜயன் ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.