பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடுகளை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக ஒருவர் தேசிய புலனாய்வு அமைப்புக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தார்.டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகத்திற்கு சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசியவர் பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்தார்
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசாரும் மோடி மற்றும் கெஜ்ரிவாலின் வீடுகளுக்கு விரைந்து சென்றனர். அங்கு தீவிர சோதனை நடத்தியதில் குண்டு எதுவும் இல்லை என்பதும், அந்த நபர் பொய் சொல்லியதும் தெரிய வந்தது.வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை அவரது செல்போன் எண்ணை வைத்து கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இந்த வார துவக்கத்தில் ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து குடியரசுத் தலைவர் மாளிகையில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.போலீசார் அவரது எண்ணை வைத்து அவரை கண்டுபிடித்ததில் அவர் போதைப் பொருளுக்கு அடிமை என்பதும், போதையில் அவ்வாறு போன் செய்ததும் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.