Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2016

புங்குடுதீவு வரலாற்றில் மறைக்கப்பட்ட திகில் உண்மைகள் - வீடியோ


யாழ்ப்பாணத்தில் வர்த்தகத்துக்கு பெயர்பெற்ற இடம் எனில் அது புங்குடுதீவு என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
பண்டைய காலத்தில் வர்த்தக ரீதியாக அரேபியர்கள் அடிக்கடி வந்துபோன இடமாக புங்குடுதீவு காணப்படுகின்றது.
அத்தோடு சோழர்களும் பல்லவர்களும் இத் தீவை விட்டு வைக்கவில்லை.
தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுவதால் புங்குடுதீவில் உள்ள சில இடங்களுக்கு சோழகனோடை, சோழன்புலம், பல்லதீவு போன்ற பெயர்களும் இடப்பட்டுள்ளன.
சர்வதேச வர்த்தக மையமாகவும் புங்குடுதீவு இருந்துள்ளது எனில் பெருமைக்குரியதே. இவ்வாறான பெருமைகளைக் கொண்ட புங்குடுதீவின் உண்மையான பெயர் “பொன்-கொடு தீவு” என சிலரால் சொல்லப்படுகிறது. அதாவது பொன் விளையும் பூமி. அனைத்து சர்வதேச வர்த்தக வியாபாரிகளையும் சந்திக்க வைத்த, பண்டைய மன்னர்கள் வணிகம் செய்த இடமான பொன் கொடு தீவு காலப்போக்கில் மருவிமருவி புங்குடுதீவாக மாறியதாக ஒரு வரலாறு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது. பொன்கொடுதீவு என பெயர் வந்தமைக்கு வணிகம் தான் காரணமாக இருந்தாலும், ஒரு சிலரால் இவ்வாறும் பேசப்படுகின்றது. அதாவது எந்தப் பெண்ணையும் இத்தீவில் நம்பி விடலாம் என. அதனாலேயே பொண்கொடுதீவு எனவும் சொல்லப்படுகின்றது. எதுவாக இருப்பினும் என்னத்தைப் போட்டாலும் பொன்னாக விளையும் மண் பொன்கொடுதீவு ஆகும். என்னதான் இருந்தாலும் புங்குடுதீவினருக்கே வெளிச்சம்…!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.