May 28, 2016
‘பனை எண்ணெய் (பாம் ஆயில்)’ பயங்கரம்
தமிழ் திரைப்படங்களில் உடலுறவுக் காட்சிகள் கா லை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கு ம் பேஸ்ட் தொடங்கி சோப், பவுடர், மேக்கப் பொருட் கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க் ரீம்ஸ என நாம் ஒருநாளில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்குப் பின் னால் ஒரு சமூகத்தின் கதறலும், பல உயிரினங்களின் பிசுபிசுப்பான ரத்த க்கறையும், தீப்பிடித்து எரியும் காடுகளின் ஓலங்களும் கரைந்திரு க்கின்றன என்றால் நம்ப முடிகிற தா? அத்தனைக்கும் காரணம் பாம் ஆயில்ஸ அதாவது பனை மர எண் ணெய்! எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்பது மாதிரி, எதை விற்றால் லாபம் கிடைக்கும் என்பதுதான் இன்று பன்னாட்டு வணிக நிறுவனங்களி ன் ஒரே இலக்கு. அதற்காக எந்த நியாய தர்மங்களும் பார்க்க மா ட்டார்கள். அவர்களின் ஒரே நியா யம் சொந்த நாட்டு இயற்கை வள ங்களின் மேல்கை வைக்கக் கூடா து. மற்ற வளரும் நாடுகளின் வள ங்களை இஷ்டத்துக்கு சூறையாட லாம். உலகம்முழுக்க இருக்கும் அழகு சாதனப் பொரு ட்களை த் தயாரிக்க பாம் ஆயில் அவசியம். லிப் ஸ்டிக் போன்ற மேக்கப் பொருட்களில் நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், பிளாஸ்டிக் சாஷேக்களில் வெளிப்புற வெப்பத்தைத் தா ங்குவதற்கும், க்ரீம்களின் மெ ன்மையான மேற்பரப்புக்காவும் பாம் ஆயில் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுக்க மக்களின் மேக் கப் மோகம் பல மடங்கு அதிகரிக்க, (அந்த மோகத் தைத் தூண்டுவதும் இதே பன்னாட்டு நிறுவனங்கள் தான்!) பாம் ஆயிலின் தே வை எக்கச்சக்கமாக அதி கரித்தது. ‘தென்னையை வெச்சவன் தின்னுட்டு செத்தா ன்ஸ பனையை வெச்சவன் பார்த்துட்டு செத்தான்’ என் பது, இரண்டு மரங்களும் வளர் வதற்கு ஆகும் காலத்தைச் சொ ல்லும் அட்டகாசப் பழமொழி. வளர்வதற்கு மிக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் பனைமரம் , கொடுப்பது என்னவோ கொஞ் சூண்டு எண் ணெய்தான். ‘அது எப்போ ஆயில் தந்துஸ நாம எப்போ காசு பார்த்து’ என்கிற அவசரம் பன்னாட்டு கம்பெனிக ளுக்கு. என்ன செய்வது என யோசித்தவர்கள் எடுத்த குரூரமானமுடிவுதான், காடு களை அழித்து பனை மரங் களை நடுவது. எங்கே காட் டை அழிப்பது? இந்தியா, ஜெர்மன் போன்ற இரண்டா ம் நிலை நாடுகள் என்றா ல், எதிர்ப்பு இருக்கும். வறு மையும் கல்வியறிவும் குறைவான மூன்றாம் நிலை நாடுகள் என்றால் எந்த எதிர்ப்பும் இருக்காதே! இந்தோனேஷியா, மலேசியா, சுமத்ரா, தாய்லாந்து போன்ற குட்டி நாடுகளை இந்தப் பன்னா ட்டு கம்பெனிகள் குறி வைத்தன. சிறு வயதில் புவியியல் வகுப்பி ல் டிராப்பிக்கல் ரெயின் ஃபாரஸ்ட்(Tropical rain forest) எனப் படித்திருப்போமே, இத்தீவுகளில் அப்படிப்பட்ட காடுகள் நிறையவேஉண்டு. இந்தக் காடுகளில் மழையும் அதிகமாக இருக்கும்; அதே அளவு வெயிலும் இருக்கும். வெப்பமும் குளிரும் கலந்தி ருப்ப தால் நிறையப்புற்கள் முளைக்கும். எனவே மான்க ள் இருக்கும். அதை வேட் டையாட புலிகள் இருக்கும். ஒவ் வொரு காட்டுக்கும் ஒருஸ்பெஷல் உயி ரினம் இருப்பதைப்போல, இங் கே உராங்உட்டான் குரங்குகள் ஏராளமாக இருக்கின்றன. இக் காட்டை அழித்தால் வளர்வதற் கு குறைவான காலம் எடுத்து க்கொள்ளும், அதேசமயம் அதிக எண்ணெய்தரும் பனைமரங்க ளை நடலாம். அப்புறம் என்ன? காசு,பணம், துட்டு, மணி,மணி! அரசாங்க அதிகாரிகளுடன் நேரடியாக டீல்போட்டு, ‘ உங்கள்நாட்டில் ஒருபகுதி காட்டை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். அதில் வித வித மானமரங்களுக் குப்பதில் பனை மரங்கள் நடப்போகிறோம்’என ஒப் புதல் வாங்கிவிட்டார்கள். எப்போ மரத்தை வெட்டி, எப்போ புதுபனை மரங்க ள் நட்டு, எப்போ காசு பார் ப்பது? அதனால் காடுகளை அழிக்க, சிம்பிளாக அவற் றுக்குத் தீ வைத்து விட்டார்கள். எந்தப் பக்கமும் போக முடியாமல் புலிகள், சும த்ரன் நீர் யானைகள், ஆ சிய யானைகள் போன் றவை தீயில் கருகி அல றிச் செத்தன. பறவைகள் கூச்சலோடு இடம் பெய ர்ந்தன. இது வரை 400 சுமத்ரன் புலிகளைக் காணவில்லை. இடம் பெயர்ந்தி ருக்கலாம்அல்லது இற ந்திருக்க லாம். 30-க்கும் மேற்பட்ட பறவை இன ங்கள் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. இது ஒரு முறை மட்டும் நடக்கவில்லை. ஒரு பகுதியை எரித்து, பனைநடவு முடிந்தவுடன் அடுத்த பகுதி. இப்போதுஇக்கட்டுரையை நீங்கள் படித்துக்கொ ண்டிருக்கும் போதே, அங்கே கரும் புகை யைக் கக்கியபடி, மரண ஓல த்துடன் காடு எரிந்து கொண் டிருக்கும். உலகில் ஒரு மணி நே ரத்துக்குக் கிட்டத்தட்ட எட்டு கால்பந்து மைதா னங்கள் அளவுக்கான காடுகள், தினமும் அழி க்கப்பட்டு வருகின்றன என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு கவலையோடு தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக எரிக்கப்படும் காடுகளால் உரா ங்உட்டான் குரங்குகளின் எண்ணிக் கை சரசரவென சரிபாதியாகக் குறைந்து வி ட்டது. ‘உராங் உட்டான்’ என் றால்காடுகளின் மனிதன் என அர்த்தம். ஏனென்றால், இதன் 97% செயல்பாடுகள் அப்படியே மனிதனைப் போல வேஇருக்கும். பாலூட்டுவதி ல் இருந்து கூட்டுக் குடும்பமா க வாழ்வது வரை அப்படியே மனிதனைப்போலவே வாழு ம். குரங்கு வகையிலேயே அ திக புத்திசாலி. International union for the conservation of Nature and natural resources என்ற சுற்றுச்சூழல் அமை ப்பினர் ஒவ்வொரு வருட மும் ‘ரெட் புக்’ என்ற பட்டி யலை வெளியிடுகின்றன ர். அதில் ’55 ஆயிரம் போ ர்னியோ உராங் உட்டான் உள்ளன. காடுகளில் தீ வைப்பதால் வருடத்துக்கு 2,000குரங்குகள் அழிந்து விடுகின்றன. சுமத்ரன் தீவு உராங்உட்டான் மொத்தமே 6,300-தான் இருக்கின்றன. அது வருட த்துக்கு 1,000 என்ற அளவில் அழிந்து வருகின்றன. இதேவேகத்தில்போனா ல், இன்னும் 10ஆண்டுகளில் உரான் உட்டான் குரங்குகளே இருக்காது’ எ ன்கிறது. காடுகள்தானே அழிகின்றன என அலட்சியமாக இருந்துவிட முடி யாது. இப்படி வருடம் முழுவதும் எரிக்கப்படும் காடுக ளால் 35 மில்லியன் டன் கார் பன் வெளியாகி, கடந்த 10 ஆ ண்டுகளில் குளோபல் வார்மி ங் 20%வரை உயர்ந்து விட்ட து. இப்படி ஓர் அழிப்பு வேலை வெளியே தெரியவந்து அதிர் ச்சி அலை ஏற் படுத்த, பல தன் னார்வ நிறுவனங்கள் பன்னா ட்டு நிறுவனங்களுக்கு எதிர் ப்புக் குரல் கொடுத்துப் போரா ட ஆரம்பித்திருக்கின்றன. அதுபோன்ற ஓர் அமைப்புதான் Roundtable on Sustainable Palm Oil (RSPO). ‘இன்றைய தினசரி வாழ்க் கையில் இருந்து பாம் ஆயி ல் பயன்பாடுகொண்ட பொருட்களை நீக்குவது என்பது ரொம்பவே கஷ்டம். மக்கள் பயன்படுத்தும் பொருட்க ளில் இருக்கும் பாம் ஆயிலில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம், காடு களை அழித்தே எடுக்கப்படுகிற து. இதில் மக்களைக் குறைசொ ல்வதில் அர்த்தம்இல்லை. ‘காடு களை அழித்து பனை மரங்களை நடுவதற்குப் பதிலா க,இயல்பாக பனைமரங்கள் வளர்க்க முடிந்த இடங்களி ல் வளர்த்து அதைப் பயன் படுத்துங்கள்’ என, பன்னா ட்டு நிறுவனங் களை வலி யுறுத்துகிறோம். இதில் மக் கள் தங்கள் பங்காக கடையில் வாங்கும் பொருட்களி ல் எங்கள் முத்திரையான CertifiedSustainable Palm Oil (CSPO) அல்லது green palm முத்திரை இருக் கிறதா எனப் பார்த்து வாங்குங்கள். அப்படி நாங்கள் முத்திரை கொடுத் திருக்கும் பொருட்கள், காடுக ளை அழிக்காமல் பாம் ஆயில் எடுத்துப் பயன்படுத்தியது என அர்த்தம். அப்படி எந்த முத்திரை யும் இல்லையென்றால், அதன் தயாரிப் பாளரிடம் நீங்கள் கேள் வி கேட்க உரிமை இருக்கிறது. காடுகளை அழிக்காமல் நல்ல முறையில் உருவாக்கப்படும் பாம் ஆயிலினால்தயாரிக்கப்படும் பொருட்க ளின் பட்டியல், இணைய தளத்திலும் கி டைக்கிறது. நமதுபங்காக அதைவாங்க ஆரம்பித்தா லே மற்ற கம்பெனிகள் யோசிக்க ஆரம்பித்துவிடு வார்கள்’ என்கிறார்கள். பெண்களே! அடுத்தமுறை லிப்ஸ்டிக் பூசும்போது லேசாகச் சுவைத்துப் பாருங்கள். உராங்உட்டான் குரங்கி ன் ரத்தப் பிசுபிசுப்பை உணர்வீர்கள் மக்கள் குரல்
‘பனை எண்ணெய் (பாம் ஆயில்)’ பயங்கரம்
Reviewed by மறத்தமிழன்
on
May 28, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.