May 24, 2016
கழுத்தை நெரித்து பெண் கொலை கள்ளக்காதலன் கைது
திருச்சிற்றம்பலம் அருகே கழுத்தை நெரித்து பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கள்ளக்காதல்
தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே துலுக்கவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வைரவன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கூத்தாயி (வயது42). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (42). மரவியாபாரி. இவருக்கும் கூத்தாயிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பேராவூரணி சந்தையில் காய்கறிகள் வாங்கி விட்டு வந்த கூத்தாயியை ஜெயச்சந்திரன் சந்தித்தார். அப்போது செல்போனில் கூத்தாயி வேறொரு நபருடன் பேசிக் கொண்டு இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் ஜெயச்சந்திரன் கூத்தாயியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோப்பிற்கு சென்றார்.
கழுத்தை நெரித்து கொலை
அங்கு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயச்சந்திரன் கூத்தாயியின் கழுத்தை நெரித்து கொலை செய்து பிணத்தை துலுக்க விடுதி கிராமத்தை சேர்ந்த ஒருவரின் வாழை தோப்பில் வீசிவிட்டு சென்று விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மேமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கூத்தாயியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூத்தாயியின் சகோதரர் சங்கரன் கொடுத்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஞானசுமதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஜெயச்சந்திரனுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கழுத்தை நெரித்து பெண் கொலை கள்ளக்காதலன் கைது
Reviewed by மறத்தமிழன்
on
May 24, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.