Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2016

''அதிமுகவை தெறிக்க விடுவோம்'': தூத்துக்குடி விஜய் மக்கள் மன்றம் சபதம்



தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை தெறிக்க விடுவோம்'' என்று தூத்துக்குடி விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. பின்னர் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பில்லா ஜெகன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டில் விஜய் கொடுத்த ஆதரவில்தான் அதிமுக ஆட்சி அமைத்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் விஜய்யின் தமிழன், கத்தி, புலி படங்கள் திரைக்கு வரும்போது இடஞ்சல்கள் கொடுக்கப்பட்டது.

ஆதலால், இந்த தேர்தலில் அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆறு சட்டசபைகளிலும் திமுகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். திமுக வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம். இந்த தேர்தலில் அதிமுகவை தெறிக்க விடுவோம்'' என்று தெரிவித்தார்.

பின்னர் அங்கிருந்து திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அலுவலகத்துக்கு சென்று அவருக்கு மாலை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதேபோல் கடந்த இரு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட விஜய் ரசிகர்கள் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க உறுதி எடுத்து இருப்பதாக செய்தி வெளியானது.

ஒரு கட்டடத்தில் திமுக பிரமுகர் பெரியசாமியின் ஆதரவாளராக கருதப்பட்டு தற்போது அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளராக இருப்பவர்தான் இந்த பில்லா ஜெகன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.