வெள்ளையூர் என்னும் ஊரில் சின்னய்யா என்ற செல்வர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் நால்வரும் தந்தைக்கு உதவியாக இருந்தனர். முதுமை அடைந்த அவர் கடுமையான நோயில் விழுந்தார். அவரை மருத்துவர்கள் சோதித்து மருந்து தந்தனர். தான் பிழைக்க மாட்டோம் என்பது அவருக்குப் புரிந்தது.
தன் அருகே கவலையுடன் இருந்த நான்கு மகன்களையும் அழைத்தார்.
அவர்கள் நால்வரும் அவர் அருகே வந்தனர்.
""மகன்களே! நான் எத்தனை நாட்கள் வாழப் போகிறேனோ... தெரியவில்லை. இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்த்தேன். நான் படுத்து இருக்கும் கட்டில் கால்களை பாருங்கள். முதலாவது கால் மூத்தவனுக்கு உரியது, இரண்டாவது கால் இரண்டாமவனுக்கு உரியது, மூன்றாவது கால் மூன்றாமவனுக்கு உரியது, நான்காவது கால் இளையவனுக்கு உரியது. அவற்றின் கீழ் ஒவ்வொருவருக்கும் உரிய புதையலை வைத்துள்ளேன்.
""நான் இறந்ததும் அவரவருக்கு உரிய கட்டில் காலின் கீழே தோண்டுங்கள். புதையலை எடுத்துக் கொண்டு ஒற்றுமையாக வாழுங்கள்,'' என்றார்.
அவர் மூச்சு நின்றது.
தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் காரியங்களை அவர்கள் சிறப்பாகச் செய்தனர்.
அவர் சொன்னது போலக் கட்டிலின் கீழே தோண்டினர். அவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
மூத்தவனுக்கு ஒரு பானையில் மண் கிடைத்தது. அடுத்தவனுக்கு ஒரு பானையில் உமி கிடைத்தது. மூன்றாமவனுக்கு ஒரு பானையில் பொன் துகள் கிடைத்தது. இளையவனுக்கு ஒரு பானையில் சாம்பல் கிடைத்தது.
"எதற்காக இந்தப் பொருள்களைத் தந்தை புதைத்து வைத்தார்? இவற்றின் வழியாக அவர் என்ன சொல்ல முயற்சி செய்தார்? ஒன்றும் புரியவில்லையே' என்று அவர்கள் நால்வரும் குழம்பினர்.
நான்கு பானைகளையும் எடுத்துச் சென்று ஊர்ப் பெரியவர்களின் முன் வைத்தனர்.
நடந்ததை எல்லாம் சொன்ன அவர்கள், ""எங்கள் தந்தையார் இந்தப் பானைகளை ஏன் புதைத்து வைத்தார்? நீங்களாவது விளக்கமாகச் சொல்லுங்கள்,'' என்று கேட்டனர்.
ஊர்ப் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து சிந்தித்தனர். அவர்களால் அந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
அவர்களில் ஒருவர், ""இளைஞர்களே! உங்கள் தந்தையார் ஏன் இப்படிச் செய்தார் என்பதை எங்களால் அறிய முடியவில்லை. நீங்கள் நீதிமன்றம் செல்லுங்கள். நீதிபதி நல்ல தீர்ப்பு வழங்குவார்,'' என்று அறிவுரை சொன்னார்.
அதன்படியே அவர்கள் நால்வரும் பானைகளுடன் நீதிமன்றம் வந்தனர்.
நீதிபதியிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்கள்.
எல்லாப் பானைகளையும் பார்த்தார் அவர்.
"செல்வந்தர் எதற்காக ஒரு பானையில் மண்ணை வைத்தார். ஒரு பானையில் உமியை வைத்தார். ஒரு பானையில் பொன்துகளை வைத்தார். ஒரு பானையில் சாம்பலை வைத்தார். என்ன காரணமாக இருக்கும்' என்று சிந்தித்தார்.
செல்வந்தரின் அறிவுக்கூர்மையை அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
நால்வரையும் பார்த்து அவர், ""பானையில் மண்ணைப் பெற்றவன் தந்தையின் நிலங்களைப் பெற வேண்டும். உமியைப் பெற்றவன் தானியங்களைப் பெற வேண்டும். பொன் துகளைப் பெற்றவன் அணிகலன்கள், நகைகளைப் பெற வேண்டும். சாம்பலைப் பெற்றவன் ஆடு, மாடுகளைப் பெற வேண்டும். இந்த எண்ணத்தில் உங்கள் தந்தையார் இப்படிச் செய்துள்ளார்.
அவர் சொன்னது போலவே நீங்கள் பங்கு பிரித்து ஒற்றுமையாக வாழுங்கள்,'' என்றார்.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அவர்கள் நால்வரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
தங்கள் தகப்பனது ஆசைபடியே சொத்துக்களை பிரித்துக் கொண்டு, ஒற்றுமையாக வாழ்ந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.