திருவனந்தபுரம்:கேரளாவில், சட்டக் கல்லுாரியில் படித்த தலித் மாணவி, பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், நர்சிங் படித்து வரும் தலித் மாணவி ஒருவர், பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.கேரளாவில், உம்மன் சாண்டி தலைமையிலான, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், 16ல், சட்டசபை தேர்தல் நடக்கிறது. எர்ணாகுளத்தை அடுத்த பெரும்பாவூரில், சட்டக் கல்லுாரியில் படித்த தலித் மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு கிடந்தார்.
இச்சம்பவத்தை கண்டித்து, மாநிலம் முழுவதும் மாணவர்களும், தன்னார்வ அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கேரளாவில், மற்றொரு தலித் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் அருகே வர்கலாவில், நேற்று முன்தினம், ஒரு பாலத்துக்கு அடியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிலிருந்து, பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது.அந்த வழியாகச் சென்றவர்கள், அங்கு சென்று பார்த்தபோது, 19 வயதுடைய பெண் ஒருவர், அலங்கோலமான நிலையில், அழுது கொண்டிருப்பதை பார்த்து
அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் சேர்ந்தனர். டாக்டர்கள் நடத்திய சோதனையில், அந்தப் பெண், பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.அந்தப் பெண் கூறியதாவது:
நான், நர்சிங் படித்து வருகிறேன். தோழி வீட்டுக்கு, ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன். அந்த ஆட்டோ டிரைவரை, எனக்கு நன்கு தெரியும். வழியில், தன் நண்பர்கள் இரண்டு பேரை,
ஆட்டோவில் அவர் ஏற்றினார். ஆட்டோவை, யாருமில்லாத பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு, என்னை மூவரும் பலாத்காரம் செய்தனர். பயத்தில் நான் மயங்கிவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும், சில நாட்களே உள்ள நிலையில், இந்த பலாத்கார சம்பவங்கள், காங்கிரஸ் கூட்டணிக்கு
தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.
முதல்வருக்கு எதிர்ப்பு
கொலை செய்யப்பட்ட சட்டக் கல்லுாரி மாணவியின் தாய், உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பார்த்து ஆறுதல் தெரிவிக்க, முதல்வர் உம்மன் சாண்டி நேற்று சென்றார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உம்மன் சாண்டி கூறுகையில், ''குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும்,'' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.