Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2016

உலகிலேயே முதியவர்களை அதிகம் கொண்ட நாடாகிறது சீனா


சீனாவின் மக்கள்தொகையில் 60-வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகி்ல் அதிக மக்கள்தொகையை கொண்ட நாடான சீனாவின் மொத்த மக்கள்தொகையில் தற்போது 16 சதவீதம் பேர் முதியவர்களாக உள்ளனர். உலகிலேயே முதியவர்களை அதிகம் கொண்ட நாடாகிறது சீனா; மக்கள்தொகையில் முதியவர்கள் எண்ணிக்கை 220 மில்லியனை தாண்டியது.அதேபோல், 16 முதல் 59 வயது வரையிலான மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்படியே சென்று கொண்டிருந்தால் வரும் 2020-ம் ஆண்டிற்குள் 30.7 பில்லியன் டாலர்களை வயதானோருக்கான பென்சன் உதவித்தொகையாக சீனா வழங்க வேண்டியிருக்கும். இந்நிலையில், சீனா அதிபர் ஜி ஜிங்பிங் இதுகுறித்து அவசர உயர்மட்டக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். அதில், முதியோரின் உடல்நலம் குறித்த திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் பற்றி ஆலோசனை நடத்தினார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.