தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. "போதுமான அளவுக்கு வெற்றி பெறும்" என்று கருணாநிதி பதில் கூறிஉள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவை பொதுத் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகள் தவிர்த்து 232 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
போதுமான அளவுக்கு வெற்றி
வாக்குப்பதிவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார்.
எத்தனைத் தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசிய கருணாநிதி ”போதுமான அளவுக்கு வெற்றி பெறும்", திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார். தேர்தல் ஆணையம் ஒரு சில இடங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது, ஆனால் லாரிகள் மூலம் பண பரிமாற்ற சம்பவங்களும் நடந்து உள்ளது. தேர்தல் ஆணையம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கையை தொடங்குமா என்று மக்கள் மனிதில் கேள்வி உள்ளது என்றும் கருணாநிதி கூறிஉள்ளார்.
234 தொகுதிகளிலும் வெற்றி
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகாவுடன் வாகளித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
”தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். அதிமுக எத்தனை முறைகேடுகளிலும் ஈடுபட்டாலும் திமுக வெற்றி பெறுவது நிச்சயம். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதை மக்கள் விரும்பவில்லை" என்று கூறினார்.
அ.தி.மு.க.விற்கு பாடம்
சென்னை மந்தவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் குஷ்பு வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்றார். அ.தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது, அ.தி.மு.க.விற்கு பாடம் புகட்ட மக்கள் தயார் ஆகிவிட்டனர். 99 சதவிதம் பண பட்டுவாடாவில் ஈடுபட்டது அ.தி.மு.க.தான் என்றார்.
தமிழகத்தை சின்னாபின்னமாக்கிவிட்டனர்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் திண்டிவனத்தில் வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தமிழகத்தில் இவ்வாண்டு வித்தியாசமான தேர்தல் நடக்கிறது. திராவிட கட்சிகள் 50 ஆண்டுகால ஆட்சியில் மது, இலவசம், ஊழல் ஆகியவற்றை கொடுத்து நாட்டை சின்னாபின்னம் ஆக்கிவிட்டன. இந்நிலையில் ஒரு ஆண்டு காலத்திற்கு மேலாக வளர்ச்சி முன்னேற்றத்தை முன்வைத்து கொள்கை ஆவணமாக கொண்டு தமிழகத்தை அன்புமணி வலம்வந்தார்.
இளைஞர்கள், இவ்வளது ஆண்டுகளாக ஓட்டளிக்காமல் ஒதுங்கியிருந்தவர்கள் அனைவரும் வாக்களிக்க முன்வந்து உள்ளனர். மதுவை ஒளிக்க ராமதாஸால் மட்டுமே ஒழிக்க முடியும் என்று பெண்கள் நம்புகின்றனர். 80 சதவித மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்று கூறிஉள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.