நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது இதனால் தார் சாலைகள் உருகிவருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
85 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் பெங்களூரில் அதிக பட்ச வெப்ப நிலை பதிவாகி உள்ளது.கேரளாவில் கடந்த 29 ஆண்டுகளில் பதிவாகாத 41.8 டிகிரிச் செல்சியஸ் வெயில் பதிவாகி உள்ளது.
ஆந்திராவில் அதிகபட்சமாக பாப்பட்லாவில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. ஆந்திராவில் 11 இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரித்து உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பலோடியல் நாட்டில் அதிகபட்சமாக 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
இதனிடையே சாலைகள் பலவும் வெப்பத்தின் தாக்கத்தால் உருகி பொதுமக்களை மேலும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலியில் அமைந்துள்ள சில்வாச சாலையில் தார் உருகி வழிந்துள்ளதால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அவதிப்பட்டுள்ளனர்.
சில்வாச பகுதியில் மட்டுமின்றி குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்திலும் இதுபோன்று அதிக வெப்பத்தின் காரணமாக தார் சாலைகள் உருகி வழிந்துள்ளது. இப்பகுதி சில்வசா பகுதிக்கு 50 கிலோ மீட்டர் வட திசையில் அமைந்துள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது முதன் முறையல்ல. கடந்த ஆண்டு கத்தரி வெயில் உச்சத்தில் இருந்த மே மாதத்தில் புது டெல்லியில் உள்ள சில பகுதிகளில் தார் சாலை உருகி வழிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.