Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2016

உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவது ஏன்? விஜயகாந்த் விளக்கம்


உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்தது ஏன்? என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் போட்டி ஏன்?

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட எலவனாசூர்கோட்டையில் பிரசாரத்தை நேற்று மாலை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

விஜயகாந்த் ஏற்கனவே வெற்றிபெற்ற விருத்தாசலத்தில் போட்டியிடுவாரா? அல்லது ரிஷிவந்தியத்தில் போட்டியிடுவாரா? என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். எனக்கு அதிக குக்கிராமங்கள் உள்ள தொகுதிதான் மிகவும் பிடிக்கும். அதனால்தான் உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்தேன். விவசாயத்தையும், நெசவையும் முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே என் ஆசை.

லட்சியம் 

முதலில் இங்கு அரசு கலைக்கல்லூரி, நவீன அரசு மருத்துவமனை கட்டுவதே எனது லட்சியம். ரிஷிவந்தியம் தொகுதியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை, அ.தி.மு.க., தி.மு.க. அரசு செய்ய முடியாததை நான் செய்திருக்கிறேன். அந்த பாலத்தை கட்டுவதற்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.20 கோடி நிதி பெற்றுள்ளேன். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

என்னை வெற்றிபெற செய்தால் பள்ளிக்கூடங்களை தரம் உயர்த்துவேன். அனைத்து குழந்தைகளையும் படிக்க வைப்பேன். பள்ளிகளில் காலை, மாலை என இருவேளையும் உணவு வழங்கப்படும். படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் வேலை கொடுப்பேன்.

வளர்ச்சி பெறும்

தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது. கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள். தி.மு.க.வினர் அ.தி.மு.க.வையும், அ.தி.மு.க. வினர் தி.மு.க.வையும் குறை கூறுவதும்தான் நடந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனது தலைமையிலான ஆட்சி அமைந்ததும், இவை அனைத்தும் மாறும். தமிழகம் வளர்ச்சி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.