Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 1, 2016

புகையிலை பாக்கெட்டுகளில் 85 சதவீத அளவு எச்சரிக்கை படம் அச்சடிக்க வலியுறுத்தி மனித சங்கிலி


புகையிலை பாக்கெட்டுகளில் 85 சதவீதம் எச்சரிக்கை படம் அச்சடிக்க வலியுறுத்தி மனித சங்கிலி நேற்று மெரினா கடற்கரையில் நடந்தது.

மனித சங்கிலி

புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகளில் 85 சதவீத அளவு எச்சரிக்கை படம் அச்சடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்ரையில் நேற்று காலை ‘‘உயிரைக் காக்கும் 85%’’ என்ற தலைப்பில் மனித சங்கிலி நடந்தது. இந்த மனித சங்கிலியை சமுதாய பல் பாதுகாப்பு குழுமம், இந்திய பல் மருத்துவ சங்கம் மற்றும் புகையிலை கட்டுப்பாட்டிற்கான தமிழக மக்கள் அமைப்பு இணைந்து நடத்தியது. இதில் மாணவ, மாணவிகள், டாக்டர்கள், தமிழ்நாடு வணிகர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா தலைமை தாங்கினார்.

ஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம்

இது குறித்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா நிருபர்களிடம் கூறியதாவது:-

புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது 85 சதவீதம் எச்சரிக்கை படம் அச்சடிக்க வேண்டும் என்று, புகையிலை தடுப்பு சட்டம் பிரிவு 7-ன் கீழ் அமல் படுத்துமாறு புகையிலை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை செயல்படுத்தாத புகையிலை நிறுவனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மணல் சிற்பம்

மேலும், மெரினா கடற்கரையில் ‘உயிரைக் காக்கும் 85%’ என்பதனை குறிக்கும் வகையில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.

மனித சங்கிலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.