தஞ்சாவூர் சட்டசபை தொகுதி தேர்தல் 23–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
பணப்பட்டுவாடா புகார்
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் 23–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதால் மீதம் உள்ள 233 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற இருந்தது.
இந்த நிலையில் தஞ்சாவூர் சட்டசபை தொகுதியின் தேர்தலும் 23–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக நேற்றிரவு தேர்தல் கமிஷன் திடீரென அறிவித்தது. பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குதல் தொடர்பான புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.
தள்ளிவைப்பு
தஞ்சாவூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும், பெருமளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் பார்வையாளர் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் அந்த தொகுதியின் தேர்தல் 23–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
எனவே தஞ்சாவூர் தொகுதியில் 23–ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஓட்டு எண்ணிக்கை 25–ந் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது.
232 தொகுதிகளுக்கு...
தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரங்கசாமியும், தி.மு.க. சார்பில் டாக்டர் அஞ்சுகம் பூபதியும், மக்கள் நல கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக ஜெயபிரகாசும் போட்டியிடுகின்றனர்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதால், இன்று 232 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.