Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2016

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் படம் பிடித்தனர் தலைமறைவாக இருந்த 3 வாலிபர்கள் கைது


பெங்களூருவில், நண்பருடன் அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் படம் பிடித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.


பாலியல் தொல்லை

 ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 26). இவர் பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய தோழி ரேஷ்மி (24, இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் 2 பேரும் கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிலிகேஹள்ளி பகுதிக்கு சென்று சிகரெட் வாங்கி வீடு திரும்பி கொண்டிருந்தார்.

 அப்போது அவர்கள், பி.டி.எம். லே-அவுட் 2-வது ஸ்டேஜில் வந்தபோது அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை 3 மர்மநபர்கள் மறித்துள்ளனர். பின்னர், அவர்கள் 3 பேரும் சேர்ந்து ரேஷ்மிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அதை செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. மேலும், ‘அதிகாலையில் எதற்காக வெளியில் நடமாடுகிறாய்’ எனக்கூறி அவர்கள் ரேஷ்மியை தாக்கியதாக தெரிகிறது.

போலீஸ் விசாரணை

 பின்னர், அவர்கள் வைத்திருந்த பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்து கொண்டனர். இதற்கிடையே, ரமேசின் செல்போனை பறித்த மர்மநபர் அதில் இருந்து தனது செல்போனுக்கு போன் செய்ததோடு, நாளை இந்த எண்ணை தொடர்பு கொண்டு ரூ.10 ஆயிரம் கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளை பெற்றுக் கொள் எனக்கூறி அங்கிருந்து சென்றுவிட்டனர்.

 இதுகுறித்து ரமேஷ், பையப்பனஹள்ளி போலீசில் புகார் செய்தார். மேலும், மர்மநபரின் செல்போன் எண்ணையும் போலீசாரிடம் அவர் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்கள் 3 பேரையும் வலைவீசி தேடிவந்தனர்.

3 பேர் கைது

 முதற்கட்டமாக செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் யார்? என்பது குறித்து அறிந்து கொண்டனர். இதற்கிடையே, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 விசாரணையில், அவர்கள் 3 பேரும் பண்டிபாளையா பகுதியை சேர்ந்த வினீஷ் குமார் (25), தீபு (26), ரமேஷ் (25) என்பது தெரியவந்தது. மேலும், கூலி வேலை செய்து வரும் இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.