எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதால் மனம் உடைந்த மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குறைந்த மதிப்பெண்கள்
குன்றத்தூர் வெங்கடாபுரம், நல்லீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் குமார்(வயது 38). இவர், வளசரவாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சரவணன்(18). இவர், குன்றத்தூரில் உள்ள அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.
நேற்று முன்தினம் எஸ்.எஸ். எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் சரவணன் தேர்ச்சி பெற்றார். ஆனால் அவர், மதிப்பெண் கள் குறைவாக எடுத்து இருந்தார். இதனால் தன்னை பெற்றோர் திட்டுவார்களோ என்று பயந்தார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட சரவணன், நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய், அறையின் கதவை திறந்து பார்த்தபோது சரவணன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சரவணன் உடலை மீட்டனர். இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மனம் உடைந்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.