Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2016

பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை; போலீஸ் அதிகாரி மீது பரபரப்பு புகார்


தாராபுரத்தில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி மீது அவரது கணவர் புகார் தெரிவித்து உள்ளார்.

பெண் போலீஸ்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தவர் காயத்ரி (வயது 31) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கானப்பாடியை சேர்ந்தவர். இவரது கணவர் ஆறுமுகம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தாராபுரத்தில் அறை எடுத்து தனியாக காயத்ரி தங்கி இருந்தார்.

கடந்த சில தினங்களாக தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெரினாபேகத்திற்கு, காயத்ரி உதவியாளராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் திருப்பூரில் நடந்த ஆய்வுக்கூட்டத்துக்கு ஜெரினாபேகமும், காயத்ரியும் சென்றனர். கூட்டம் முடிந்து தாராபுரம் வந்த காயத்ரி தனது அறைக்கு சென்று விட்டு போலீஸ் நிலையம் வந்தார்.

சாவு

அப்போது போலீஸ் நிலைய வளாகத்தில் காயத்ரி திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கிருந்த போலீஸ்காரர்கள் அவரை தூக்கியபோது, காயத்ரி விஷம் குடித்திருப்பது தெரியவந்தது.

உடனே அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக இறந்தார்.

குற்றச்சாட்டு

துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெரினாபேகத்தின் வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ள தினமும் ஒரு பெண் போலீஸ் செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு செல்பவர்களை அவர், தகாத வார்த்தைகளால் அடிக்கடி திட்டுவதாகவும், இதனால் பெண் போலீசார் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிகிறது.

அந்த வகையில்தான் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற ஜெரினாபேகம், தண்ணீர் பாட்டிலை எடுத்து வர தாமதம் ஏற்பட்டதால் காயத்ரியை பலர் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சக பெண் போலீசாரிடம் காயத்ரி கூறி கதறி அழுதுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அவர், தனது அறைக்கு சென்று விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காயத்ரியின் கணவர் ஆறுமுகம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.