Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2016

பாகிஸ்தான் விஞ்ஞானிக்கு இந்தியா பதிலடி ‘உங்கள் நாட்டையே தாக்கும் வல்லமை எங்களுக்கு உள்ளது’


பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான், டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கும் வல்லமை எங்களிடம் உள்ளது என ஆணவத்துடன் கூறியது, இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரது பேச்சுக்கு பாதுகாப்பு படைகளின் முன்னாள் அதிகாரிகள் மூலம் இந்தியா சரியான பதிலடி கொடுத்துள்ளது.

இது குறித்து முன்னாள் ராணுவ தளபதி என்.சி. விஜ் கருத்து தெரிவிக்கையில், “இது மிகவும் முதிர்ச்சி இல்லாத, வழக்கத்தில் இல்லாத ஒரு கருத்து. அணு ஏவுகணைகள், போர் ஆயுதங்கள் அல்ல. அவை தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஒட்டு மொத்த பாகிஸ்தானையே தாக்குகிற அளவுக்கு இந்தியாவிடமும் வல்லமை இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசுவது இல்லை” என கூறினார்.

பாகிஸ்தான் அணு விஞ்ஞானியின் பொறுப்பற்ற பேச்சுக்கு முன்னாள் ராணுவ அதிகாரி குர்மீத் கன்வால், முன்னாள் கடற்படை அதிகாரி மன்மோகன் பகதூர், முன்னாள் விமானப்படை அதிகாரி உதய்பாஸ்கர் உள்ளிட்டவர்களும் கண்டனம் தெரிவித்து கருத்து கூறி உள்ளனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.