Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 6, 2016

இந்தியா மீது அதிகளவு மால்வேர் தாக்குதல்கள்; மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு தகவல்


கம்ப்யூட்டர் மால்வேர் புரோகிராம்கள் பல நாடுகளின் ராணுவத்திற்கு சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் உளவு ஏஜென்ஸியான ஐ.எஸ்.ஐ. இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை திருடுவதற்காக சில மொபைல் அப்ளிகேஷன்களில் மால்வேர்களை பரப்புவது உறுதியாகியுள்ளது. இதுதவிர, அவ்வபோது பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்திய அரசின் முக்கிய இணையதளங்களையும், பிரபலங்களின் இணையதளங்களையும் முடக்கி இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை பாகிஸ்தான் கொடியுடன் போஸ்ட் செய்து வருவதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகள் அதிக அளவில் மால்வேர் தாக்குதல்களுக்கு ஆளாகி வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செக்யூரிட்டி இண்டலிஜென்ஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் பாதியளவு தாக்குதல்கள் ஆசியாவில் இருந்தே தொடுக்கப்படுவதாகவும், 5-ல் ஒரு பகுதி லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் தனது ஆன்டி-மால்வேர் சாப்ட்வேரில் உள்ள சென்சார்களின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு கோடி மால்வேர் தாக்குதல்களை உலகமெங்கும் கண்டறிவதாகவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஜப்பான், பின்லாந்து, நார்வே, சுவீடன் நாடுகளில் மால்வேர் தாக்குதல்கள் குறைவாகவே காணப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.