Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 17, 2016

முதியோர் இல்லத்தில் இருக்கும் காந்தியின் பேரனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு


காந்தியடிகளின் மூன்றாவது மகனான ராம்தாஸ் காந்தியின், 3 மகன்களில் மூத்த மகன்  கனுபாய் காந்தி. 87 வயதாகும் இவர், தற்போது தனது மனைவி ஷிவ லக்ஷ்மி காந்தியுடன், டெல்லியில் உள்ள  முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியுள்ளார். 17 வயதில் இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்கா சென்ற கனுபாய் காந்தி, அங்குள்ள பிரசித்தி பெற்ற கல்வி நிலையத்தில் பயின்றார். பின்னர் நாசாவில் பணியாற்றிய இவர்,அமெரிக்காவில் இருந்து இரு ஆண்டுகளுக்கு முன் நாடு திரும்பினார்.

சொந்த வீடு இல்லாததால், கன்பாய் ராம்தாஸ் காந்தியும், அவரது மனைவியும் குஜராத்தில் உள்ள பல்வேறு முதியோர் இல்லங்களில் தங்கியிருந்தனர். தற்போது இருவரும் டெல்லியில் உள்ள முதியோர் இல்லத்தில் இடம் பெயர்ந்துள்ளனர்.நாட்டின் விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தியின் பேரன், நிரந்தர வீடு இல்லாமல் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் புகைப்படம் ஆங்கில நாளிதழ்களில் வெளிவந்துள்ளது.

இந்த தகவலை அறிந்த பிரதமர் மோடி, உடனடியாக கலாச்சாரத்துறை மந்திரி மகேஷ் ஷர்மாவை கனுபாய் காந்தியை சந்தித்து பேசுமாறு வலியுறுத்தினார். பிரதமரின் வலியுறுத்தலின் பேரில், காந்தியின் பேரனை சந்தித மகேஷ் ஷர்மா, 45 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.  அப்போது, தொலைபேசி மூலமாக கனுபாய் காந்தியுடன் பிரதமர் மோடி  பேசினார். தாய் மொழியான குஜராத்தியில் இருவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டனர். கனுபாய் காந்திக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய தயராக இருப்பதாகவும் மோடி இந்த உரையாடலின் போது  தெரிவித்தார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.