Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2016

வெளிநாடுகளில் இருந்து தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் என்ற பெயரில் ஊடுருவுவதை தடுக்க புதிய கைரேகை பதிவு முறை; மத்திய அரசு திட்டம்


இந்தியாவிற்கு இ-டூரிஸ்ட் விசாவில் வருகை தரும் வெளிநாட்டினருக்கு புதிய சோதனை முறை கொண்டு வரப்படுகிறது.

அதாவது, சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து இனி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் கைரேகையை பதிவு செய்து அதனை யூனிக் கேஸ் பைல்-ஆக சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பைலில் சுற்றுலாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் சம்பந்தபட்ட அனைத்து தகவல்களும் இருக்கும்.

தற்போது வரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட யூனிக் கேஸ் பைல்கள் இந்தியாவில் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக கைரேகை பதிவும் அடங்கும். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் அச்சுறுத்தலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 நவம்பர் 27-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட .இ-டூரிஸ்ட் விசா முறை 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 3,500 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்தியாவிற்கு வருகை தர இ-டூரிஸ்ட் விசாக்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.