அவுரங்காபாத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். அவருக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
போலீஸ்காரர்
அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் ரபிக் சேக். போலீஸ்காரரான இவர், உலகின் மிக உயர்ந்த சிகரமான இமயமலை ‘எவரெஸ்ட்’ சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தார்.
அதன்படி, அவர் ஏற்கனவே மேற்கொண்ட 2 முயற்சிகளும் இயற்கை சீற்றம் காரணமாக முறியடிக்கப்பட்டது. இருந்தாலும், ரபிக் சேக் துவண்டுபோக வில்லை. 3-வது முறையாக முயற்சி செய்தார். இமயமலையின் 26 ஆயிரத்து 240 அடி உயரத்தில் உள்ள தென் முனையான ஷெர்பா பகுதியில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
கடந்த 19-ந் தேதியன்று எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்தார். அவரது இந்த சாதனையை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெகுவாக பாராட்டினார். இதையடுத்து, எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து கீழே இறங்கியபோது, உறைபனியின் தாக்கத்தால் ரபிக் சேக் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால், அவர் உடனடியாக நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவார் என்றும் அவுரங்காபாத் போலீஸ் சூப்பிரண்டு நவின்சந்திர ரெட்டி தகவல் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.