Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 10, 2016

மோடி அரசின் 2 ஆண்டுகள் நிறைவு: எதிர்க்கட்சி, அவசரகாலத்தை இலக்காக கொண்டு பிரசாரம் மேற்கொள்ள முடிவு


மோடி அரசாங்கம் வருகிற மே 26ந்தேதியுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்வதை அடுத்து பாரதீய ஜனதா கட்சியின் சாதனைகள் குறித்து ஒரு மாதகால நீண்ட பிரசாரம் மேற்கொள்வதுடன், பாராளுமன்றத்தில் முக்கிய நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியினர் தடுத்து நிறுத்தியது குறித்தும் மக்களிடம் எடுத்து கூற திட்டமிடப்பட்டுள்ளது.

அக்கட்சியின் பாராளுமன்ற கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.  இதில், 1975ம் ஆண்டில் அவசரகாலம் அமல்படுத்தப்பட்டது குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 26ல் அதன் ஆண்டு தினத்தில் எம்.பி.ககள் இளம் தலைமுறையிடம் அது குறித்த விசயத்தை எடுத்து கூறுவதுடன், ஜனநாயகத்தை நசுக்க எப்படிப்பட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன மற்றும் அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில், பாராளுமன்ற விவகார துறை இணை மந்திரி ராஜீவ் பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 2 ஆண்டு அரசாட்சி குறித்து மோடி பேசினார்.

நாடு முழுவதும் 200 முக்கிய இடங்களுக்கு அனைத்து  மந்திரிகளும் சுற்று பயணம் மேற்கொண்டு தங்களது சாதனைகள் குறித்து மக்களிடம் அறிவித்திடுவார்கள்.  அதனுடன், பாராளுமன்றத்தில் சட்டங்கள் மற்றும் நல திட்டங்கள் நிறைவேற சிலர் எதிர்த்ததை குறித்தும் மற்றும் அத்தகைய நபர்களால் ஏற்பட்ட சேதம் குறித்தும் மக்களிடம் மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் எடுத்து கூறுவார்கள்.  இந்த சேதத்தை யார் செய்தது என்பது குறித்தும் மக்களிடம் கூறப்படும் என அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை நிறைவேற்றவிடாமல் செய்தது என மோடி அரசாங்கம் குற்றஞ்சாட்டி வருகிறது.  கட்சியின் எம்.பி.க்கள் தங்களது தொகுதிகளில் குறைந்தது ஓர் இரவு தங்கி இருப்பதுடன் அருகிலுள்ள தொகுதிகள் மற்றும் பிற பகுதிகளிலும் மக்களிடம் கலந்துரையாடுவார்கள் என ரூடி கூறியுள்ளார்.

அவசரகாலத்தின்பொழுது ஜனநாயகத்தினை நசுக்க மேற்கொண்ட முயற்சி குறித்து பேசிய மோடி, இது குறித்து இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார் என ரூடி கூறினார்.  இக்கூட்டத்தில், சுப்பிரமணியன் சுவாமி மற்றும் நவ்ஜோத் சித்து உள்ளிட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.