Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2016

பாகிஸ்தானில் தொலைந்த சிறுவன்: 2 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் இருப்பது தெரிய வந்தது


பாகிஸ்தானில் இரண்டு வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன சிறுவன் தற்போது இந்தியாவில் இருப்பது தெரியவந்துள்ளது.


பாகிஸ்தானின் கைபர் எல்லைப்புற மாகாணத்தில் உள்ள சர்சத்தா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாபர் அலி. அவரது 5-வயது மகன் துபையில் இஸ்மாயில்.

இஸ்மாயில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 2014-ம் ஆண்டு காணாமல் போய்விட்டான். இஸ்மாயிலின் பெற்றோர்கள் அவனை தொடர்ந்து தேடி வந்துள்ளனர். காணாமல் போன மறுநாள் காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இதனிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இஸ்மாயில் ராஜஸ்தானில் இருப்பது அவனது பெற்றோருக்கு தெரியவந்தது. துபாயில் இருக்கும் அவனது உறவினர் சமூக வலைதளத்தில் அவனை பற்றிய தகவலை பார்த்துள்ளார்.

சமூக ஆர்வலர் ஒருவர் வெளியிட்ட அந்த வலைதள செய்தியில், சிறுவன் இஸ்மாயில் பெற்றோருடன் சேர உதவுமாறு வலியுறுத்தி இருந்தார். மேலும் தொடர்பு எண்ணையும் அதில் இணைத்திருந்தார்.

அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, ராஜஸ்தானில் போலீசாரின் காவலில் இஸ்மாயில் இருப்பது தெரியவந்தது.

மகன் இருக்கும் இடம் தெரிந்தும் கடந்த 45 நாட்களுக்கு மேலாக அவனை பாகிஸ்தானுக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்று தந்தை ஜாபர் தெரிவித்தார்.

தன்னுடைய மகன் வீடு திரும்ப இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களை இஸ்மாயிலின் பெற்றோர்கள் எதிர் நோக்கியுள்ளனர். இருநாட்டு பிரதமர்களிடம் அவர்கள் உதவியை கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.