தடையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 4 ஆண்டுகள் தடை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஐரோப்பிய கால்பந்து சங்க தலைவர் மைக்கேல் பிளாட்டினி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிபா நிதி முறைகேடு
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சர்வதேச கால்பந்து சங்க (பிபா) தலைவர் தேர்தலில் செப் பிளாட்டர் வெற்றி பெற்றதும் அவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது பல்வேறு நிதி முறைகேடு புகார்கள் எழுந்தன. செப் பிளாட்டர் தனது பதவி காலத்தில் துணைத்தலைவராக இருந்த மைக்கேல் பிளாட்டினிக்கு ஆலோசகராக செயல்பட்டதற்காக கணக்கில் காட்டாமல் ரூ.13 கோடி வழங்கியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சர்வதேச கால்பந்து சங்க நன்னடத்தை கமிட்டி பிபா தலைவர் செப் பிளாட்டர், பிபா துணைத் தலைவரும், ஐரோப்பிய கால்பந்து சங்க தலைவருமான மைக்கேல் பிளாட்டினி ஆகியோரை சஸ்பெண்டு செய்ததுடன், இருவருக்கும் தலா 8 ஆண்டு காலம் தடையுடன் அபராதமும் விதித்தது. இந்த நடவடிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் எடுக்கப்பட்டது. பிபா அப்பீல் கமிட்டி இந்த தண்டனையை 6 ஆண்டாக குறைத்தது. ரூ.60 லட்சத்தை அபராதமாக செலுத்த உத்தரவிட்டது.
பிளாட்டினிக்கு 4 ஆண்டு தடை உறுதியானது
தன் மீதான தடையை எதிர்த்து செப் பிளாட்டர், மைக்கேல் பிளாட்டினி ஆகியோர் சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்தனர். ஐரோப்பிய கால்பந்து சங்க தலைவர் மைக்கேல் பிளாட்டினியின் மனு மீதான விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
மைக்கேல் பிளாட்டினி நடத்தை விதிமுறையை மீறி செயல்பட்டத்தை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் உறுதி செய்ததுடன், மைக்கேல் பிளாட்டினிக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு கால தடையை 4 ஆண்டாக குறைத்துள்ளது. அத்துடன் அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையும் ரூ.40 லட்சமாக குறைத்து உத்தரவிட்டது.
தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்
தடையை எதிர்த்து அப்பீல் செய்த வழக்கில் தண்டணை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மைக்கேல் பிளாட்டினி ஐரோப்பிய கால்பந்து சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் நாட்டில் ஜூன் 10-ந் தேதி தொடங்க இருக்கும் நிலையில் மைக்கேல் பிளாட்டினி தலைவர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.
இது குறித்து மைக்கேல் பிளாட்டினி கருத்து தெரிவிக்கையில், ‘இந்த முடிவு எனக்கு இழைக்கப்பட்ட ஆழமான அநீதியாகும். இருப்பினும் தேசிய சங்கங்களின் விருப்பபடி தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். எனது நேர்மையை கோர்ட்டில் நிரூபிக்க போராடுவேன்’ என்றார். 60 வயதான மைக்கேல் பிளாட்டினி பிரான்ஸ் அணிக்காக 72 சர்வதேச போட்டியில் விளையாடி 41 கோல்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்குழு கூடுகிறது
அடுத்த தலைவர் யார்? என்பதை முடிவு செய்வது குறித்து ஆலோசிக்க ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் நகரில் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.