சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாக விளங்கிவரும் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் நிறுவனரான மார்க் ஜுக்கர்பக் பூமியில் இருந்தவாறு விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தபடி ஆய்வுகளை செய்துவரும் விண்வெளி வீரர்களுடன் 'பேஸ்புக் லைவ்’ வீடியோ கால் சேவை மூலமாக வரும் ஜுன் முதல் தேதி பேசுகிறார்.
அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்து நிர்வகித்து வருகின்றன. இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர்களான டிம் கோப்ரா மற்றும் ஜெப் வில்லியம்ஸ் ஆகியோருடன் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் நிறுவனராக மார்க் ஜுக்கர்பக் ‘பேஸ்புக் லைவ் வீடியோ கால்’ என்ற செயலியின் மூலம் வரும் ஜூன் மாதம் முதல் தேதி நேருக்குநேர் பேசவுள்ளார்.
அமெரிக்க நேரப்படி அன்று பின்னிரவு 12.55 மணியளவில் நடைபெறும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமெரிக்க வெண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’வின் பேஸ்புக் பக்கத்தில் மக்கள் எழுப்பியுள்ள சந்தேகங்கள் தொடர்பான கேள்விகளை மார்க் ஜுகர்பக் முன்வைப்பார். விண்வெளியில் உள்ள வீரர்கள் அந்த கேள்விகளுக்கான பதில்களை அளிக்கவுள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ளவர்கள் ’பேஸ்புக் லைவ்’ மூலமாக இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.