மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பயன்படுத்துவதற்காக அரசு செலவில், சுமார் 48.25 லட்ச ரூபாய் மதிப்பிலான ஜாகுவார் ரக சொகுசு கார் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதையடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தனது புதிய காரை பயன்படுத்துவது குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் உள்ள மூன்றில் ஒருவர் விவசாயத்தில் போதிய வருமானம் இன்றி துன்பத்தில் உள்ள நிலையில், இந்த காரை பயன்படுத்துவது அறிவுசார்ந்த ஒன்றாக இருக்குமா? என்பதை சுமித்ரா மகாஜன் தான் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இத்தகைய விலை உயர்ந்த சொகுசு கார் சுமித்ரா மகாஜனுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதை நியாயப்படுத்தியுள்ள மக்களவை செயலர், பாதுகாப்பு அம்சங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது ஒருநாள் இரவில் எடுத்த முடிவு இல்லை எனவும், பாதுகாப்பு அம்சங்களை கணக்கில் கொண்டு மக்களவை செயலகம் எடுத்த முடிவு இது எனவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.