ஜப்பானில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வங்கி ஒன்றில் போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏ.டி.எம்.களில் ரூ.86 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஜப்பானில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ‘ஸ்டாண்டர்டு வங்கி’ உள்ளது. இந்த வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையங்கள் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில் டோக்கியோ மற்றும் ஒடிசா நகரங்களில் 24 மணி நேரமும் இயங்க கூடிய ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது.
போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி 1400 ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துள்ளனர். சுமார் 3 மணி நேரத்தில் அனைத்து ஏ.டி.எம்.களிலும் 100 பேர் அடங்கிய கும்பல் கொள்ளையடித்துள்ளது.
ஜப்பான் பணத்துக்கு 1.4 பில்லியன் யென் அதாவது ரூ.86 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். எந்திரங்களில் ஒரு கார்டுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.60 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். அப்படி இருக்கையில் ஒரே நேரத்தில் இவ்வளவு பணம் மொத்தமாக கொள்ளையடிக்க முடிந்தது எப்படி என்பது குறித்து போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.
இவர்கள் சர்வதேச கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே ஏ.டி.எம்.களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை ஜப்பான் அரசு தெரிவிக்கவில்லை. ஆனால் கொள்ளை சம்பவத்தை ஸ்டாண்டர்டு வங்கி தெரியப்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.