அரசுப் பொதுத்துறை விமான நிறுவனமான 'ஏர் இந்தியா' மீது விமர்சனங்கள் தொடுக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக, தொழில்நுட்ப காரணங்களால் அவசரமாக தரையிறக்கப்படுவது 'ஏர் இந்தியா' விமானங்களில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜூ அளித்த பதில் பின்வருமாறு:-
கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக 'ஏர் இந்தியா' நிறுவனம் தற்போது லாபத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. பெரும்பாலும் 'ஏர் இந்தியா' விமானங்களே அவசரமாக தரையிறக்கப்படுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த 2 ஆண்டுகளில் 120 அவசர தரையிறக்க சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 102 சம்பவங்கள் மருத்துவ காரணங்களுக்காக நிகழ்ந்தவையாகும். 18 சம்பவங்கள் தொழில்நுட்ப காரணங்களால் நிகழ்ந்தவை. இதிலும் கூட 23 அவசர தரையிறக்கங்கள் மட்டுமே 'ஏர் இந்தியா'வுக்கு நிகழ்ந்துள்ளது. ஏர் இந்தியா உட்பட அனைத்து விமானங்களிலும் கடுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றி வருவதால் இந்திய விமானங்கள் பாதுகாப்பான பயணத்தை வழங்கி வருகின்றன. முறையான பராமரிப்பு காரணமாக எவ்வித ஆபத்தான விபத்துகளும் இன்றி ஏர் இந்தியா பாதுகாப்பான நிம்மதியான பயணத்தை வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.