Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 18, 2016

சாந்தியடையாத வாலிப ஆவிக்கு பெண் பிணத்துடன் கோலாகல திருமணம்


சீனாவில் பெண் பிணத் துடன் மகன் ஆவிக்கு ஒரு பெற்றோர்   திருமணம் நடத்தினர்.மூட நம்பிக்கை  நமது நாட்டில் மட்டுமல்ல. உலக நாடுகள்  அனைத்திலும் நடைமுறையில்  உள்ளன. சீனாவில் மகன் ஆவிக்கு இறந்த பெண்ணின் பிணத் துடன் திருமணம் நடந்துள் ளது.

சீனாவில்  ஷான்ஸி மாகாணத்தில் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் ஒரு பெற்றோரின் மகன்   கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு அப்போது  திருமணம் ஆகவில்லை.  இதனால் அவரது  ஆவி (ஆன்மா) சாந்தியடையவில்லை என பெற்றோர் கருதினர்.

ஆகவே மகன்  ஆவிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்த நிலையில் அங்கு ஒரு பெண் மரணம் அடைந்து விட்டார். உடனே அந்த பெண்ணின் பிணத்துக்கும் தனது மகன் ஆவிக்கும் திருமணம் செய்ய எண்ணினர்.

அதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினருடன் பேசி சம்மதிக்க வைத்தனர். பின்னர்  முறைப்படி மகன் ஆவிக்கும், இறந்த பெண்ணின் பிணத்துக்கும் கோலாகலமாக திரு மணம் நடந்தது. அதற்காக பெண்ணின்  குடும்பத்தி னருக்கு ரூ.1 லட்சத்து  80 ஆயிரம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.