Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 26, 2016

அரசு அலட்சியமாக இருந்ததால் நிலத்தை விற்று அணை கட்டும் மகாராஷ்டிர விவசாயி


மகாராஷ்டிர மாநில அரசு தனது கோரிக்கையை அலட்சியப்படுத்தியதால் விவசாயி ஒருவர் வெள்ளத்தில் இருந்து பயிரை காக்க தன்னுடைய நிலத்தை விற்று சொந்த பணத்தில் அணை கட்டி வருகிறார்.

மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டம், சாங்கி துர்க்வாடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 42). விவசாயி. இவருக்கு அப்பகுதியில் 30 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்தின் அருகே கால்வாய் ஒன்று செல்கிறது. ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இந்த கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. கால்வாயில் அடித்து வரும் வெள்ளநீர் இவரது நிலத்தில் பயிரிடப்பட்ட பயிரையும் அடித்து சென்றுவிடும். இதனால் சஞ்சய்க்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அணை ஒன்றை கட்டுவதற்கு உதவி செய்யும்படி அரசுக்கு சஞ்சய் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்ல. இதையடுத்து அவர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை ரூ.55 லட்சத்திற்கு விற்பனை செய்தார். அதில் கிடைத்த பணத்தை வைத்து தன் சொந்த செலவிலேயே அணையை கட்டத்தொடங்கினார். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்த பணி இன்னும் 2 வாரங்களின் முடிவடைய உள்ளது. இந்த அணையில் 3 கோடி லிட்டர் தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

இதுதொடர்பாக சஞ்சய் பேசுகையில் ‘‘ஒருமுனையில் அரசு நீர்ப்பாசனத் திட்டத்திற்காக கோடி கணக்கான பணத்தினை செலவழித்து வருகிறது. மறுமுனையில் விவசாயியே தனக்கு தேவையானதை தன் சொந்த பணத்திலேயே செய்ய வேண்டி உள்ளது.

நான் சொந்த பணத்தில் இந்த அணையை கட்டியபோதும் அரசு அதிகாரிகள் பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுப்பதையே வேலையாக கொண்டுள்ளனர். இருப்பினும் இந்த பகுதி விவசாயிகள் எனக்கு உறுதுணையாக நின்று அணையை கட்ட உதவி செய்து வருகின்றனர்” என்றார்.

இந்த அணையால் அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த கிராமமே பயனடையும்’’ என்று விவசாய சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

விவசாயி ஒருவர் அணை கட்டும் செய்தி வெளியாகியதும் பல்வேறு பகுதியில் இருந்து விவசாய சங்கத்தினர் அங்கு சென்று அவருக்கு பாராட்டையும், தேவையான உதவியையும் வழங்கி உள்ளனர். அதிகாரிகளும் அடிக்கடி அங்கு செல்வதால், அந்த கிராமம் தற்போது பிரபலமாகிவிட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.