Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2016

டெல்லி - பைசாபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து


புதுடெல்லி - பைசாபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.

புதுடெல்லியில் இருந்து பைசாபாத் நோக்கி சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் (14206) நேற்றிரவு 9:20 மணியளவில் உத்தரபிரதேசம் மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கார்க்முக்தேஷ்வர் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து நேரிட்டு உள்ளது. விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன.

விபத்து தொடர்பாக வடக்கு ரெயில்வே செய்தித்தொடர்பாளர் நீராஜ் சர்மா பேசுகையில் விபத்து காரணமாக டெல்லி-மொரதாபாத் ரெயில்வே மார்க்கத்தில் ரெயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 9 பயணிகள் ரத்து செய்யப்பட்டது. 39 ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. அப்பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தண்டவாளம் சரிசெய்யப்பட்டு இன்று மாலை 5 மணிக்குள் அப்பகுதியில் ரெயில் போக்குவரத்து சீராகும் என்று கூறிஉள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.