உத்தர பிரதேசத்தில் புகார் கொடுக்க வந்த முதியவரை போலீசார் ஷூக்களுக்கு பாலிஸ் போட வைத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் அருகில் உள்ள சார்தவால் என்ற போலீஸ் நிலையத்தில் சித்து (வயது 50) என்ற முதியவர் தனது செல்போனை காணவில்லை என்று புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த போலீசார் ஒருவர் புகார் குறித்து கேட்டறிந்தார். மேலும் என்ன வேலை செய்கிறாய் என்று கேட்டுள்ளார். போலீசாரிடம் கூறிய சித்து தான் ஒரு செருப்பு தொழிலாளி என்று கூறியுள்ளார். காவல் நிலையத்தில் உள்ள தங்களது ஷூக்களை பாலீஸ் போட்டால் தான் புகார் பதிவு செய்யப்படும் என்று போலீசார் ஒருவர் கூறினார். பயந்து போன சித்து போலீசாரின் ஷூக்களுக்கு பாலிஷ் போட்டும் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ காட்சியை போலீஸ் நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டார்.
இந்த சம்பவம் குறித்து முசாபர்நகர் எஸ்.பி.சந்தோஷ் குமார் கூறியதாவது:
சார்தவால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த முதியரை ஷூக்களுக்கு பாலிஷ் போட வைத்தது குறித்து எங்கள் கவனத்திற்கு வந்ததுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம். சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.