Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 5, 2016

தற்கொலை செய்ததாக கருதப்பட்டவர் கொலை செய்யப்பட்டது அம்பலம் பிரேதபரிசோதனையில் தெரியவந்தது


தண்டையார் பேட்டையில் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்பட்டவர், கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் அம்பலமானது.
தனிமையில் வசித்தவர்
சென்னை தண்டையார்பேட்டை, துர்கா தேவி நகரை சேர்ந்தவர் காஜா கமாலுதீன் (வயது 45), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி 3 வருடம் முன்பு இறந்துவிட்டார். கமாலுதீன் தனது இரண்டு மகள்களுடன் வசித்துவந்தார். மகள்களுக்கு திருமணம் செய்துகொடுத்த பிறகு வீட்டின் முதல்மாடியில் தனிமையில் வசித்துவந்தார்,
இந்த நிலையில் கடந்த மாதம் 28–ந் தேதி இரவு 11.30 மணியளவில் மாடியில் இருந்து உடலில் தீ எரிந்த நிலையில் கமாலுதீன் கீழே விழுந்தார், இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கமாலுதீன் தலையில் பலத்த காயம் இருந்ததால், அவரை மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 29–ந் தேதி பரிதாபமாக இறந்தார்.
கொலையானது அம்பலம்
மாடியில் இருந்து விழுந்ததால் அவருக்கு தலையில் அடிபட்டு இருக்கலாம் என்றும், தனிமை காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் ஆர்.கே.நகர் போலீசார் கருதினர். இதுதொடர்பாக விசாரணை நடத்திவந்தனர்.
கமாலுதீன் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று ஆர்.கே.நகர் போலீசாருக்கு வந்தது. அதில் கமாலுதீன் தலையில் இரும்பு கம்பி அல்லது பலமான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உள்ளதாலேயே தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது கழுத்து நெரிக்கப்பட்டு உள்ளதால் கழுத்து எலும்பு உடைந்து உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.
பெண்ணுடன் தொடர்பு
இதனால் உஷாரான போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது கமாலுதீன் வீட்டின் 2–வது மாடியில் வாடகைக்கு வசித்துவந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கும் கமாலுதீனுக்கும் தொடர்பு இருந்துவந்ததாக தெரிந்தது. அதனால் அவருக்கும், அந்த குடும்பத்திற்கும் பிரச்சினை இருந்துவந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பா சந்தேகத்தின்பேரில் கமாலுதீன் வீட்டில் வசித்துவந்த ராஜ்பாபு (25) என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை என நினைத்து இருந்த வழக்கு கொலை என தெரியவந்ததும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.