சுவிட்சர்லாந்து நாட்டில், போலீஸ் அவசர எண்ணை அடிக்கடி தொடர்புகொண்டு தொந்தரவு செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில், பெயர் வெளியிடப்படாத 33 வயதான நபர் ஒருவர் வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார்.
இவர் 'வழக்கமாக' மேற்கொள்ளும் வேலைகளில் ஒன்று, போலீசின் அவசர உதவி எண்ணான 117-ஐ தொடர்புகொண்டு போலீசாரை உதவிக்கு அழைப்பது.
ஒருமுறை, இருமுறை அல்ல. இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இவர் 59 முறை '117' எண்ணை தொடர்புகொண்டு போலீசாரை உதவிக்கு அழைத்திருக்கிறார்.
ஒவ்வொரு முறை அழைக்கும்போதும் ஒவ்வொரு காரணத்தை போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், சமீபத்தில்தான் இவரது அழைப்பு போலீஸ் தலைமை அதிகாரிக்குச் சென்றுள்ளது.
அப்போது, கத்தியால் தனது கையை வெட்டிக்கொண்டதாகவும், உடனடியாக வந்து தன்னைக் காப்பாற்றுமாறும் போலீசாரை கூப்பிட்டிருக்கிறார், அந்நபர்.
அவரது வீட்டுக்குச் சென்று போலீசார் சோதனை செய்தபோது, அந்த நபர் கத்தி காயம் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, 'எனது தாயார் வீட்டுக்கு என்னை யாரும் அழைத்துச் செல்ல மறுக்கின்றனர். போலீசாரை தொடர்புகொண்டால், அவர்கள் தங்கள் வாகனத்தில் என்னை தாயார் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதால் 117-ல் அழைத்தேன்' என்று அலட்டிக்கொள்ளாமல் கூறியிருக்கிறார்.
அந்த ஆள் சொல்லிய வினோதமான காரணத்தால் எரிச்சல் அடைந்த போலீசார், அவர் அழைத்த எண்ணை சோதனை செய்தபோது, இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து 59 முறை அவர் போலீசாரின் அவசர எண்ணை தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்தது.
போலீசாரை தேவையின்றித் தொந்தரவு செய்த குற்றத்துக்காக அந்த நபரை போலீசார் உடனடியாக கைது செய்து ஜெயிலில் அடைத்துவிட்டனர்.
சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி, தேவையில்லாமல் போலீசாரின் அவசர எண்ணை அடிக்கடி தொடர்புகொள்ளும் நபருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
அளவுக்கு அதிகமானால் 'அழைப்பும்' ஆபத்து என்பதை சிறைக் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் அந்த ஆசாமி இப்போது உணர்ந்திருப்பார்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.