மேற்கு வங்காள மாநிலம், புர்துவான் மாவட்டத்தில் 2014–ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2–ந்தேதி ஒரு வீட்டில் குண்டு வெடித்தது. இதில், வங்காள தேசத்தை சேர்ந்த ஜே.எம்.பி. என்னும் ஜமாத்துல் இஸ்லாம் முஜாகிதீன் பங்களாதேஷ் இயக்க தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள், அதே இயக்கத்தின் தீவிரவாதிகளான ரகுமத்துல்லா மசூது சாஜித் மற்றும் முகமது நாயிம் ஆவர்.
இவர்களுக்கு நெருக்கமானவர், ஜே.எம்.பி. இயக்கத்தின் டாக்கா நகர தலைவர் அப்துல் பேட்டன் என்ற கைருல் இஸ்லாம் ஆவார்.
வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் குற்றத்தடுப்பு அதிரடி போலீஸ் படை நேற்று முன்தினம் நடத்திய அதிரடி நடவடிக்கையில், இந்த அப்துல் பேட்டனும், மேலும் 3 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.
இந்த தகவல்களை குற்றத்தடுப்பு அதிரடி போலீஸ் படையின் செய்தி தொடர்பாளர் முப்தி மகமது கான், டாக்காவில் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.