Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2016

தேர்தலுக்காக இடமாற்றம் செய்யப்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் பதவி


தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இடமாற்றம் செய்யப்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் பதவி

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி போலீஸ் துறையில் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். தற்போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு நேற்று பணி நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன் விவரம் வருமாறு:-

சென்னை பெருநகர முன்னாள் போலீஸ் கமிஷனரும், டி.ஜி.பி.யுமான டி.கே.ராஜேந்திரன், தமிழக சிறைத்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். போலீஸ் சூப்பிரண்டு எஸ்.லட்சுமி கோவை மாநகர போலீஸ் சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராகவும், போலீஸ் சூப்பிரண்டு என்.எம்.மயில்வாகனன் சென்னை மதுவிலக்கு அமலாக்க பிரிவு சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சூப்பிரண்டு ராஜேஸ்வரி

போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மகேஸ்வரன் ‘கியூ’ பிரிவு சூப்பிரண்டாகவும், சூப்பிரண்டு இ.எஸ்.உமா சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராகவும், சூப்பிரண்டு எஸ்.ராஜேஸ்வரி சென்னை சி.பி.சி.ஐ.டி-1 சூப்பிரண்டாகவும், சூப்பிரண்டு ஜே.லோகநாதன் சென்னை சி.பி.சி.ஐ.டி-3 சூப்பிரண்டாகவும், சூப்பிரண்டு ஜி.சுப்புலட்சுமி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 7-வது பட்டாலியன் கமாண்டன்டாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஏ.ராதிகா மதுரை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனராகவும், மத்திய பணியிலிருந்து திரும்பும் சூப்பிரண்டு பிரதீப் குமார் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனராகவும், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 7-வது பட்டாலியன் பிரிவு கமாண்டன்டாக பணியாற்றி வரும் ஆர்.ராமகிருஷ்ணன் சேலம் மாநகர போலீஸ் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.