Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 18, 2016

பிரதமர் மோடியின் புகைப்படத்தை சித்தரித்த விவகாரம்: கர்நாடக இளைஞருக்கு சிறை


பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானியின் காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படத்தை, ஐதாராபாத் பாராளுமன்ற உறுப்பினரான அசாதுதின் ஓவைசியின் சகோதரர் அக்பரூதின் ஓவைசியின் காலில் விழுந்து பிரதமர்  ஆசி பெறுவது போல சித்தரிக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியது.

கர்நாடகத்தில் சமூக வலைதள வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த புகைப்படத்துக்கு எதிராக கொந்தளித்த பாஜக பிரமுகர்கள்,  போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, பல்வேறு தரப்புக்கு இடையே  விரோதத்தை தூண்டும் செயல் என்ற குற்றச்சாட்டின் வழக்கு பதிவு செய்த போலீசார், புகைப்படத்தை வெளியிட்ட முகம்மது மெஹ்பூப் என்ற 25 வயது முஸ்லீம் இளைஞரை கைது செய்தனர். கர்நாடகாவில் உள்ள ஜூவல்லரி கடையில் பணி புரிந்து வந்த மெஹ்பூப் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அப்போது, புகைப்படத்தை தான் சித்தரிக்கவில்லை எனவும் நண்பர்கள் தவறாக சித்தரித்து தனக்கு அனுப்பியதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

கடந்த மாதம், இதே புகைப்படத்தை(அத்வானி காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படம்) சவூதி மன்னரின் காலில் விழுந்து பிரதமர் ஆசி பெற்றது போல செய்தியாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சித்தரித்து வெளியிட்டது பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது. இது தொடர்பாகவும் பாரதீய ஜனதா புகார் அளித்தது நினைவிருக்கலாம்.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.