உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகருக்கு அருகே லிட்டோச்கி என்ற கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான 2 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் முதியோர் இல்லம் ஒன்று தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. இதில் 35 முதியவர்கள் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.25 மணிக்கு அங்கு திடீரென தீ பிடித்தது. மின்னல் வேகத்தில் தீ மளமளவென பரவ தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறினர்.
உடனடியாக தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இதற்கிடையே அங்கு விரைந்து வந்த நெருக்கடி கால சேவை பிரிவினர், தீயில் அகப்பட்டுக்கொண்ட 18 பேரை மீட்டனர். அவர்களில் 5 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
17 பேர் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இதுகுறித்து அங்கு விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த தீ விபத்துக்கு உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் கிராய்ஸ்மேன் வேதனை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.