தமிழகத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை வரும் ஜூன் 1ம் தேதிக்கு முன்பாக நடத்தவேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதிக்கு, தமிழக ஆளுநர் ரோசய்யா எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியும், தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ரங்கசாமியும் கடந்த 22 ம் தேதியன்று ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். மேற்கண்ட இரண்டு தொகுதிகளின் தேர்தலை ஆளுநரின் அனுமதியின்றி தேர்தல் ஆணையம் தள்ளி வைத்திருப்பதாக அவர்கள் கூறினர்.
பண பட்டுவாடா புகாரை நீதிமன்றத்தில்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், அதற்காக தேர்தலை தள்ளிவைத்தால், தேர்ந்தெடுக்கப்பட உள்ள எம்.எல்.ஏ.க்களின் பதவிக்காலம் குறைந்து விடும் என்றும் அவர்கள் அந்த மனுவில் கூறி இருந்தனர்.
இதையடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை கடந்த 23ம் தேதியன்று அழைத்து ஆளுநர் ஆலோசனை நடத்தினார். மறுநாள் (24 ம்தேதி) தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஆளுநரிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தாக்கல் செய்தார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிமுறைகள், அரசியல் சட்டம், முந்தைய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில், அ.தி.மு.க. வேட்பாளர்களின் கோரிக்கை மனுக்களையும், தலைமை தேர்தல் ஆணையத்தின் விரிவான அறிக்கையையும் ஆளுநர் ஆய்வு செய்தார்.
மேற்கண்ட 2 தொகுதிகளுக்கான தேர்தலை தள்ளிவைத்ததன் மூலம், அத்தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள எம்.எல்.ஏ.க்கள், நடைபெற உள்ள டெல்லி மாநிலங்களவை தேர்தலில் ஓட்டுபோடும் சட்டப்பூர்வ உரிமையை இழக்க வேண்டி இருக்கும் என்ற உண்மையையும் கருத்தில் கொண்டார்.
அதன் அடிப்படையில், பொது நலன் மற்றும் அனைத்து தரப்பினரின் நலன் கருதி, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கான தேர்தலை கூடிய விரைவில், குறிப்பாக ஜூன் 1ம் தேதிக்கு முன்பே நடத்துமாறு பரிந்துரை செய்து தலைமை தேர்தல் ஆணையருக்கு ஆளுநர் இன்று (26.05.2016) கடிதம் எழுதி உள்ளார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.