Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 21, 2016

ஜெயலலிதா மூன்றாமிடம்... கருணாநிதி நான்காம் இடம்! -இது என்ன பட்டியல்?


தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள 232 எம்.எல்.ஏ.க்களில் 170 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள். இதில், ஜெயலலிதா மூன்றாமிடத்திலும், கருணாநிதி நான்காம் இடத்திலும் உள்ளனர்.

தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில், இந்த முறை அதிக அளவில் கோடீஸ்வரர்கள் போட்டியிட்டனர். இதில், அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 997 பேரில் 553 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்தது.

தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையும் முடிந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இந்நிலையில், தமிழக மக்கள் புதிதாக தேர்ந்தெடுத்துள்ள எம்.எல்.ஏ.க்களில் 170 பேர் கோடீஸ்வர்களாக உள்ளனர் . இதை தொடர்ந்து, மொத்தம் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 70 சதவீதம் எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே அதிக எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக இருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதில், அதிக கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள பணக்கார கட்சி என்ற முதலிட அந்தஸ்தை அ.தி.மு.க. தட்டிச் சென்றுள்ளது. வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க.வின் 134 எம்.எல்.ஏ.க்களில் 91 பேர் கோடீஸ்வரர்கள். இதற்கு அடுத்தபடியாக 73 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சி என்ற 2வது இடத்தை தி.மு.க. பிடித்துள்ளது. இதேபோல், வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரில் 5 பேர் கோடீஸ்வரர்கள். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.யும் கோடீசுவரர் அந்தஸ்துடன் உள்ளார்.

இந்த 170 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் முதல் இடத்தை நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார் பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.337 கோடியாகும். அண்ணாநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.கே.மோகன் ரூ.170 கோடி சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல்வர் ஜெயலலிதா ரூ.113 கோடி சொத்துக்கள் மதிப்புடன் மூன்றாவது இடத்திலும், தி.மு.க. தலைவர் கருணாநிதி ரூ.62 கோடி சொத்துக்கள் மதிப்புடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.