Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 12, 2016

கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும் வெட்டிவேர்


வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

வெட்டிவேர் கோரைப் புல் இனத்தை சார்ந்தது. மணற்பாங்கான இடங்களில் இது அதிகம் காணப்படும். ஆற்றுப்படுகைகளில் பெரும்பாலும் செழித்து வளரும். நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரக்கூடியது. வேர் பகுதி கொத்தாக காணப்படும். கொத்தாக இருக்கும் வேரை, வெட்டி எடுத்து பயன்படுத்துவதால் இதற்கு வெட்டி வேர் என பெயர் வந்திருக்கலாம். இதற்கு குருவேர் என்ற பெயரும் உண்டு.

(பலரும் நன்னாரி வேரையும், வெட்டிவேரையும் ஒன்றாக கருதுகிறார்கள். இரண்டும் வெவ்வேறானவை)

தமிழகத்தில் கிடைக்கும் வெட்டிவேர் அதிக வாசம் உடையதாகவும், மருத்துவ தன்மை அதிகம் உள்ளதாகவும் இருக்கிறது.

கோடை காலத்தில் மண்பானை நீரில் வெட்டிவேரை இட்டு குடிப்பது வழக்கம். இது தாகத்தை தணித்து, சோர்வை நீக்கி உற்சாகத்தை அளிக்கும். வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். தீக்காயங்களில் வெட்டிவேரை அரைத்து பூசலாம். கால் எரிச்சல், வலி போன்றவற்றிற்கு வெட்டிவேரை தேங்காய் எண்ணெய்யில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசவேண்டும்.



வெட்டிவேர் ஊறிய நீரை குடித்தால் காய்ச்சல், நீர் எரிச்சல், நீர் கடுப்பு, உடல்சோர்வு, தோல் நோய்கள் மற்றும் மனஅழுத்தம் போன்றவை குறையும். காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும். அந்த நீரை பருகுவதால் ஜீரணசக்தி அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணும் குணமாகும்.

வெட்டிவேரிலிருந்து ஒருவித நறுமண எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மனதை அமைதிப்படுத்தி மனநோய்க்கு மருந்தாகின்றது. வெட்டி வேர் மருந்துகளிலும், குளியல் பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது. வெட்டிவேரால் சருமத்திற்கு பொலிவும், அழகும் கிடைக்கும்.

கூந்தல் தைலம், சோப்பு, வாசனை திரவியங்கள் போன்றவைகளும் வெட்டிவேரில் தயாரிக்கப்படுகிறது. கோடை காலத்தில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்க வெட்டிவேர் தட்டி, வெட்டி வேர் விசிறி போன்றவைகளும் தயாரித்து பயன்படுத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.