தூத்துக்குடி மாவட்டம், கோயில்பட்டியில் ரயில் மறியலில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே பரபரப்புக்குள்ளானது.
விவசாய கடன்களை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

அப்போது, அங்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், வைகோவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, இரண்டு பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தில் பெரும் சலசலப்பு உண்டானது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து எஸ்.பி. வெளியேறினார்.
அப்போது பேசிய வைகோ, விவசாயிகள் மீதான ஜப்தி நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும், போலீஸ் அடித்தால் தாங்கிக் கொள்வோம், ஓட மாட்டோம் என்று ஆவேசமாக பேசினார்.
இதனிடையே சென்னை சென்ட்ரலிலும் இன்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.